நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 426 மாணவர்களும், கர்நாடக மாநிலத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 107 மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 50 மாணவர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலை மாணவர்கள் 9 பேருக்கும், செவிலியர் கல்லூரி மாணவிகள் 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.