இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஏப். 23) வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்,
"தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 900 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து 13 ஆயிரத்து 723 நபர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 நபர்களுக்கும் என மொத்தம் 13 ஆயிரத்து 776 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 14 லட்சத்து 2 ஆயிரத்து 442 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 95 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்த 8 ஆயிரத்து 78 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 44 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துமனையில் 44, அரசு மருத்துமனையில் 34 என 78 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 என உயர்ந்துள்ளது.
சென்னையில் வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு 31 ஆயிரத்து 170 , செங்கல்பட்டில் 8 ஆயிரத்து 186, கோயம்புத்தூரில் 5 ஆயிரத்து 830, திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 266 என சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 3,01,541
கோயம்புத்தூர் - 71,161
செங்கல்பட்டு - 71,474
திருவள்ளூர் - 54,012
சேலம் - 37,980
காஞ்சிபுரம் - 35,059
கடலூர் - 28,516
மதுரை - 26,728
வேலூர் - 24,451
தஞ்சாவூர் - 23,455
திருவண்ணாமலை - 21,757
திருப்பூர் - 23,478
கன்னியாகுமரி - 19,879
திருச்சிராப்பள்ளி - 20,541
தூத்துக்குடி - 20,036
திருநெல்வேலி - 20,266
தேனி - 18,680