தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் நேற்று (டிசம்பர் 31) 1,155 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று (ஜனவரி 1) ஒரே நாளில் 1,470 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Omicron Cases Increasing Rapidly in Tamil Nadu, Covid In Tamil Nadu
Omicron Cases Increasing Rapidly in Tamil Nadu

By

Published : Jan 1, 2022, 9:49 PM IST

சென்னை: சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 403 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,470 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 66 லட்சத்து 8 ஆயிரத்து 42 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 27 லட்சத்து 4 ஆயிரத்து 410 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் அதிகரிப்பு

தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 8 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 611 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 4 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் நான்கு, அரசு மருத்துமனையில் நான்கு என எட்டு நபர்கள் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 682 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 168 நபர்களும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (டிசம்பர் 31) 120 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று புதிதாக ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Vaccines for Children: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு சுகாதாரத்துறை

ABOUT THE AUTHOR

...view details