தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று 4,506 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 80 நாட்களுக்கும் பின்னர் 4 ஆயிரத்து 506 ஆக குறைந்துள்ளது. இதேபோன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் 38 ஆயிரத்து 191 ஆக குறைந்துள்ளது.

இன்றைய கரோனா பாதிப்பு, கரோனா பாதிப்பு
4506 PEOPLE TESTED POSITIVE IN TAMIL NADU TODAY

By

Published : Jun 30, 2021, 9:13 PM IST

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 776 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரத்து 506 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 3 கோடியே 19 லட்சத்து 96 ஆயிரத்து 953 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பரிசோதனையில், இதுவரை 24 லட்சத்து 79 ஆயிரத்து 696 பேர் தொற்றால் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.

குணமடைந்தவர்கள்

இவர்களில், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 38 ஆயிரத்து 191 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்று குணமடைந்த 5 ஆயிரத்து 537 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சைப்பெற்று குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 24 லட்சத்து 8 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. இன்று(ஜூன் 30) சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 34 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 79 நோயாளிகளும் என 113 பேர் இறந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,32,529
  • கோயம்புத்தூர் - 2,19,504
  • செங்கல்பட்டு - 1,56,884
  • திருவள்ளூர் - 1,11,025
  • சேலம் - 87,864
  • திருப்பூர் - 82,373
  • ஈரோடு - 89,632
  • மதுரை - 72,279
  • காஞ்சிபுரம் - 70,232
  • திருச்சி - 69,244
  • தஞ்சாவூர் - 63,575
  • கன்னியாகுமரி - 58,969
  • கடலூர் - 57,944
  • தூத்துக்குடி - 54,331
  • திருநெல்வேலி - 47,207
  • திருவண்ணாமலை - 49,339
  • வேலூர் - 46,919
  • விருதுநகர் - 44,536
  • தேனி - 42,319
  • விழுப்புரம் - 42,464
  • நாமக்கல் - 44,657
  • ராணிப்பேட்டை - 40,912
  • கிருஷ்ணகிரி - 39,870
  • திருவாரூர் - 36,814
  • திண்டுக்கல் - 31,615
  • புதுக்கோட்டை - 26,966
  • திருப்பத்தூர் - 27,558
  • தென்காசி - 26,427
  • நீலகிரி - 28,353
  • கள்ளக்குறிச்சி - 27,064
  • தர்மபுரி - 24,502
  • கரூர் - 22,029
  • மயிலாடுதுறை - 20,177
  • ராமநாதபுரம் - 19,619
  • நாகப்பட்டினம் - 17,850
  • சிவகங்கை - 17,689
  • அரியலூர் - 14,861
  • பெரம்பலூர் - 11,056
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,005
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: ’ஒரு வாரத்தில் ஆபாசப் பதிவுகளை நீக்குக’ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கெடு!

ABOUT THE AUTHOR

...view details