தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து 3 ஆயிரத்து 867 என பதிவாகியுள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Jul 4, 2021, 9:03 PM IST

சென்னை:மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஜூலை 4) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், ”தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 330 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 865 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என 3 ஆயிரத்து 867 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 26 லட்சத்து 33 ஆயிரத்து 34 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 24 லட்சத்து 96 ஆயிரத்து 287 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானது கண்டறியப்பட்டது.

குணமடைந்தவர்கள்

இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 35 ஆயிரத்து 294 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்த 4 ஆயிரத்து 382 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 27 ஆயிரத்து 988 என உயர்ந்துள்ளது.

இன்று (ஜூலை 4) தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 54 நோயாளிகளும் என 72 பேர் இறந்துள்ளனர். இவர்களுடன் இறந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்து 5 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,33,432
  • கோயம்புத்தூர் - 2,21,415
  • செங்கல்பட்டு - 1,57,655
  • திருவள்ளூர் - 1,11,441
  • சேலம் - 89,121
  • திருப்பூர் - 83,579
  • ஈரோடு - 90,815
  • மதுரை - 72,610
  • காஞ்சிபுரம் - 70,531
  • திருச்சி - 69,998
  • தஞ்சாவூர் - 64,471
  • கன்னியாகுமரி - 59,250
  • கடலூர் - 58,372
  • தூத்துக்குடி - 54,514
  • திருநெல்வேலி - 47,318
  • திருவண்ணாமலை - 49,990
  • வேலூர் - 47,092
  • விருதுநகர் - 44,781
  • தேனி - 42,514
  • விழுப்புரம் - 42,738
  • நாமக்கல் - 45,187
  • ராணிப்பேட்டை - 41,130
  • கிருஷ்ணகிரி - 40,260
  • திருவாரூர் - 37,049
  • திண்டுக்கல் - 31,751
  • புதுக்கோட்டை- 27,250
  • திருப்பத்தூர் - 27,663
  • தென்காசி - 26,500
  • நீலகிரி - 28,678
  • கள்ளக்குறிச்சி - 27479
  • தர்மபுரி - 24,886
  • கரூர் - 22,216
  • மயிலாடுதுறை - 20,284
  • ராமநாதபுரம் - 19,716
  • நாகப்பட்டினம் - 17,933
  • சிவகங்கை - 17,925
  • அரியலூர் - 15,070
  • பெரம்பலூர் - 11164
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,006
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: TN Unlocked: தமிழ்நாடு முழுவதும் ஆரம்பம்

ABOUT THE AUTHOR

...view details