தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குறைந்து வரும் கரோனா - 1245 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு - தமிழ்நாட்டில் கரோனா இன்று

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்ள் எண்ணிக்கையும், நோய் தொற்றினால் சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கரோனா
கரோனா

By

Published : Oct 15, 2021, 10:48 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அக்டோபர் 15ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 279 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழ்நாட்டில் இருந்த 1243 நபர்களுக்கும், டெல்லி மற்றும் கர்நாடகாவில் இருந்து மாநிலத்திற்கு வந்த தலா ஒருவருக்கும் என 1245 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை 4 கோடியே 82 லட்சத்து 37 ஆயிரத்து 70 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 26 லட்சத்து 84 ஆயிரத்து 641 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணம் அடைந்த 1442 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 33 ஆயிரத்து 534 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 12 நோயாளிகளும் என 16 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  1. சென்னை - 5,52,459
  2. கோயம்புத்தூர் - 2,44,699
  3. செங்கல்பட்டு - 1,70,302
  4. திருவள்ளூர் - 1,18,668
  5. ஈரோடு - 1,03,115
  6. சேலம் - 98,934
  7. திருப்பூர் - 94,220
  8. திருச்சிராப்பள்ளி - 76,819
  9. மதுரை - 74,943
  10. காஞ்சிபுரம் - 74,454
  11. தஞ்சாவூர் - 74,542
  12. கடலூர் - 63,770
  13. கன்னியாகுமரி - 62,107
  14. தூத்துக்குடி - 56,100
  15. திருவண்ணாமலை - 54,665
  16. நாமக்கல் - 51,462
  17. வேலூர் - 49,635
  18. திருநெல்வேலி - 49,160
  19. விருதுநகர் - 46,202
  20. விழுப்புரம் - 45,675
  21. தேனி - 43,524
  22. ராணிப்பேட்டை - 43,262
  23. கிருஷ்ணகிரி - 43,275
  24. திருவாரூர் - 41,055
  25. திண்டுக்கல் - 32,960
  26. நீலகிரி - 33,259
  27. கள்ளக்குறிச்சி - 31,186
  28. புதுக்கோட்டை - 30,000
  29. திருப்பத்தூர் - 29,173
  30. தென்காசி - 27,314
  31. தர்மபுரி - 28,120
  32. கரூர் - 23,814
  33. மயிலாடுதுறை - 23,126
  34. ராமநாதபுரம் - 20,485
  35. நாகப்பட்டினம் - 20,806
  36. சிவகங்கை - 20,018
  37. அரியலூர் - 16,781
  38. பெரம்பலூர் - 12,012
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1027
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details