தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விரைவில் தமிழில் நீதிமன்ற தீர்ப்புகள்: சி.வி. சண்முகம் உறுதி - ப. சிதம்பரம் கைது

சென்னை: நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்மொழியில் மொழிமாற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உறுதியளித்துள்ளார்.

CV shanmugam

By

Published : Sep 3, 2019, 7:36 PM IST

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ”நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துவருகிறார். மொழிமாற்றத்திற்கான மென்பொருள் உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது ஜெயலலிதாதான். இவ்வழக்கில் இன்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும். எதிர்க்கட்சித்தலைவர் முதலில் அவர் பணியை செய்ய வேண்டும், முதலமைச்சர் மீது பொறாமைகொண்டு அவர் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

சி.வி. சண்முகம் பேட்டி

மத்திய அமைச்சராக 9 முறை இருந்த ப.சிதம்பரம், தமிழ்நாட்டிற்கு எந்த நலனும் செய்யாமல் தன் குடும்ப நலனுக்காவே செயல்பட்டார். இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, ஒரு முறைகூட தமிழ்நாட்டிலிருந்து ஆளுநர்களை தேர்வு செய்யவில்லை. தற்போது பாஜக அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசையை முதல் பெண் ஆளுநராக நியமித்தற்கு பாராட்டுகள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details