தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கை' - சென்னை உயர் நீதிமன்றம் - High Court

'நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படியான நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச்செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்' என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கை, சென்னை உயர் நீதிமன்றம்
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கை, சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Aug 1, 2022, 3:26 PM IST

சென்னை:வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தமிழ் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு,சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து கடந்த மார்ச் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று (ஆகஸ்ட் 1) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கைத்தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அலுவலர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதேபோல நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதுமட்டுமின்றி, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என தலைமைச்செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்ட போதும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச்செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

மேலும், கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்கமுடியாது எனவும் அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 10 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:"தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு; 2 மாதங்களில் கிளியர் செய்யணும்" - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details