கரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு, காணொலி காட்சி மூலம் அவசர வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து, கீழமை நீதிமன்றங்களில் படிப்படியாக நேரடி விசாரணைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அடங்கிய மூத்த நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழு கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களையும் வரும் ஜனவரி 18ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களுக்குத் தேவைப்பட்டால் காணொலிக் காட்சி விசாரணையை அனுமதிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி முழு அளவில் கீழமை நீதிமன்றங்களை அனுமதிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள், தங்கள் கருத்துக்களை, டிசம்பர் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்கும் படியும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் முழு அளவில் வழக்குகளை நேரடி விசாரணைக்கு அனுமதிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன.18ஆம் தேதிமுதல் கீழமை நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி - உயர் நீதிமன்றம் - MHC management
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ஆம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
Court
இதையும் படிங்க: ஏடிஎம்மில் திருட முயன்ற வடமாநில இளைஞர் கைது!