தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விக்னேஷ் லாக்கப் மரணம்: காவலர்கள் 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - விக்னேஷ் லாக்கப் மரணம்

சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் லாக்கப் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனு தள்ளுபடி
மனு தள்ளுபடி

By

Published : Jun 7, 2022, 3:54 PM IST

சென்னை: கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அன்று இரவே அவர் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விக்னேஷ் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்வதாக அறிவித்தார்.

இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் விக்னேஷை லத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து, குற்றவாளியாக காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், காவலர் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி முன்பு நடைபெற்றது. ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்றுவருவதால் ஜாமீன் வழங்க கூடாது என சிபிசிஐடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, சிபிசிஐடி வாதத்தை ஏற்று 5 காவலர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'எங்களுக்கும் பாய தெரியும்' - மதுரை ஆதீனத்திற்கு சேகர் பாபு பதிலடி

ABOUT THE AUTHOR

...view details