தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மைனர் பெண்ணின் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டவருக்கு அபராதம் - போக்சோ

மைனர் பெண்ணை மணமுடித்து அவருடன் இருக்கும் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்ட நபருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீதி மன்றம்
நீதி மன்றம்

By

Published : Nov 23, 2021, 8:49 PM IST

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், 18 வயது பூர்த்தியாகாத பெண்ணை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில், அப்பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதாகி பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

ஆட்கொணர்வு மனுத் தாக்கல்

அப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியானதால் வேறு ஒருவருடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இதனையடுத்து தனது மனைவி சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஜாமீனில் வெளிவந்த பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அப்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் திருமணமாகிவிட்டதால் வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தினர்.

வழக்கை வாபஸ் வாங்க மறுப்பு

ஆனால் குடும்பத்தினரின் சட்டவிரோத காவலில் இருக்கும் பெண்ணை நேரில் ஆஜர்படுத்தி விசாரித்தால், தன்னுடன் வருவதற்கே விருப்பப்படுவார் எனவும், வழக்கை வாபஸ் பெற முடியாது எனவும் மனுதாக்கல் செய்தவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அப்பெண், தாய் மற்றும் கணவர் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது நீதிபதிகளிடம், தனது சொந்த விருப்பத்தில், பெற்றோரின் சம்மதத்துடன் தான் திருமணம் முடித்ததாக அப்பெண் தெரிவித்தார். முதலில் திருமணம் செய்த நபருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும், அவரது நடத்தை சரியில்லாததால் அவரை விட்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

நீதி மன்றம்
அப்போது, அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களை முதலில் திருமணம் செய்த நபர் முகநூலில் வெளியிட்டுள்ளதாக சம்மந்தப்பட்ட பெண்ணின் தாயார் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அபராதம் விதிப்பு

இதனை பதிவு செய்த நீதிபதிகள், பெண்ணை மீடகக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, 75 ஆயிரம் ரூபாய் அபராதப் பணத்தை 8 வாரங்களுக்குள் பெண்ணின் தாயார் வசம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பாலியல் தொல்லை - பள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details