சென்னை: தண்டுவட காயமடைந்தோர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தசைச் சிதைவு, முதுகுத் தண்டுவட பாதிக்கப்பட்டவர்களுக்கு 2015 முதல் வழங்கப்பட்ட பேட்டரியால் இயக்கப்படும் சக்கர நாற்காலிகள் தரமற்றவை என்று தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே அந்த ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டதாகவும், வாங்கப்பட்ட பேட்டரியில் இயக்கப்படும் சக்கர நாற்காலிகள் தரமானவையா என்று சோதனை செய்து பார்க்க எந்த அறிவியல்பூர்வமான நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற சக்கர நாற்காலிகள் பயன்படுத்தியதால் மாற்றுத்திறனாளிகள் மேலும் பாதிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சக்கர நாற்காலிகள் பழுதுபார்ப்பதற்கு எந்தச் சேவை நிலையங்களும் உருவாக்கப்படவில்லை என மனுதாரர் அமைப்புத் தெரிவித்துள்ளது.