தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கர்ணனை கைது செய்யாதது ஏன்? டிஜிபி, காவல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருக்கும் காவல்துறை நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து, டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் இருவரும் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

case
case

By

Published : Nov 30, 2020, 6:34 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வரும், முன்னாள் நீதிபதி கர்ணன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் முன்னாள் நீதிபதி கர்ணனை நேரடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தப்பட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என அவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறையின் இந்நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இன்னும் ஏன் கர்ணனை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் இருவரும் டிசம்பர் 7 ஆம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

ABOUT THE AUTHOR

...view details