தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10 ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவிடும் தம்பதி! - கிளிகளின் உறவினர்

சென்னை: மரங்கள் இல்லா நகரமாக மாறிவரும் சென்னையை பறவைகள் இல்லா நரகமாக மாறவிடக்கூடாது என்கிற முனைப்பில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வருகின்றனர் சுதர்ஷன் வித்யா தம்பதியர். அது குறித்த ஒரு சிறப்பு செய்தித்தொகுப்பு.

feeding
feeding

By

Published : Jan 30, 2021, 7:44 PM IST

கிராமமோ, நகரமோ காலை எழுந்ததும் நம் காதுகளில் சிறு குருவிகளின் சத்தமும், காக்கைகளின் கரைச்சலும் கேட்காத நாளாக அது இருக்காது. இவை அனைத்தும் மரங்கள் என்ற ஒற்றை ஆதாரத்தினால் நடப்பவை. ஆனால், சென்னையில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், பறவைகளே இல்லாத நகரமாக மாறி வருகிறது. அதனை ஓரளவிற்கேனும் ஈடு செய்ய முனைந்துள்ளது ஒரு குடும்பம்.

சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 3 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சுதர்ஷன் வித்யா குடும்பம், தங்களது வீட்டு மொட்டை மாடியை பறவைகளுக்காகவே பகிர்ந்துள்ளனர். நாள்தோறும் காலை மாலை இருவேளையும் பச்சைக்கிளி, புறா, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு, இத்தம்பதியர் அரிசி, வேர்க்கடலை உள்ளிட்ட தானியங்களை உணவாக அளித்து வருகின்றனர்.

சுமார் 10 ஆண்டுகாலமாக இதனை செய்து வருவதாக கூறும் சுதர்ஷன், ஆரம்பத்தில் 100, 200 என இங்கு வந்த கிளிகளின் எண்ணிக்கை, தற்போது 5,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கிறார். இங்கு வரும் பறவைகளுக்காக தினமும் 60 கிலோ அரிசியும், 4 கிலோ வேர்க்கடலையும் உணவாக அளிக்கின்றனர் சுதர்ஷனும் வித்யாவும்.

கிளிகளின் உறவினர் சுதர்ஷன் வித்யா தம்பதி!

மரங்கள் இருந்தால் அதிலுள்ள பழங்களை கிளிகள் உண்ணும். ஆனால், மரங்களே இல்லாத காரணத்தால் அவை இங்கே வந்து உண்பதாக தெரிவிக்கிறார் வித்யா. அதோடு மழைக் காலங்களில் அடைவதற்கு இடமின்றி, ஆயிரக்கணக்கில் பறவைகள் வருவதாகவும் கூறுகிறார் அவர். ஆகவே, இப்பறவைகளுக்காகவாவது வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறார் வித்யா.

சுதந்திர உணர்வை கண்ணெதிரே நமக்கு உணர்த்தி வரும் பறவைகளை ஒருபோதும் நாம் கூட்டில் அடைத்து வைக்கக்கூடாது என்று வலியுறுத்தும் இத்தம்பதி, தங்களது வருமானத்தில் 50% மேல் பறவைகளுக்கு உணவளிக்க மட்டுமே செலவு செய்து வருவது போற்றுதலுக்குரிய செயலாகும்.

இதையும் படிங்க: நெல்லையில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details