தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடன் பிரச்சினை: தம்பதி தற்கொலை, பிள்ளைகள் மாயம் - கடன் தொல்லை

கொளத்தூரில் கடன் பிரச்சினையில் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர்களது பிள்ளைகளைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

காவல்துறையினர்
காவல்துறையினர்

By

Published : Dec 13, 2021, 1:39 PM IST

சென்னை:கொளத்தூர் பாலாஜி நகர் 5ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (62), இவரது மனைவி பாரதி (59). கோவிந்தராஜ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்துவந்தனர்.

இவர்களுக்கு பாக்கியலட்சுமி (40) என்ற மகளும், தினேஷ் (35) என்ற மகனும் உள்ளனர். பாக்கியலட்சுமிக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி புதுச்சேரியில் வசித்துவருகிறார். தினேஷ் பெற்றோருடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் பாக்கியலட்சுமி தனது 18 வயது மகளை சென்னை கல்லூரியில் சேர்ப்பதற்காக கடந்த 10 நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 11) பாக்கியலட்சுமிக்கும், கோவிந்தராஜுக்கும் இடையே பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்குக் கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.

கடன் பிரச்சினையால் தம்பதி தற்கொலை

இதனைத் தொடர்ந்து வேலைக்குச் சென்றிருந்த பாக்கியலட்சுமியின் கணவர் பிரகாஷ் நேற்று அதிகாலை (டிசம்பர் 12) வீட்டிற்கு வந்து பார்த்தபோது கோவிந்தராஜும், பாரதியும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

கடன் பிரச்சினையால் தம்பதி தற்கொலை

அதன்பின் பாக்கியலட்சுமி தனது தாலிச் சங்கிலியை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு தினேஷுயுடன் அதிகாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த கொளத்தூர் காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற இருவர் என்ன ஆனார்கள், எங்குச் சென்றார்கள் என்ற விவரம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்.

இதையும் படிங்க:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: லெப்டினென்ட் ஜெனரல் முதலமைச்சருக்கு நன்றி!

ABOUT THE AUTHOR

...view details