சென்னை:தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெறவுள்ளது. அது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை நடைபெற்றது.
அதில், 268 வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்திடவும், தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பு செய்யவும், காவல் துறையினரின் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து தடையில்லா மின்சார வசதி, கணினி வசதிகள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், காவல் துறையினருக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன எனத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 268 மையங்களில் நாளை காலை (பிப்ரவரி 22) 8 மணிக்குத் தொடங்கும்.