தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உதவி கால்நடை மருத்துவர் பணிக்கான கலந்தாய்வு பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் இணைய வழி விண்ணப்பத்தில் தெரிவித்த கல்விச் சான்றிதழ் மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும்.
கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அனுப்பப்பட மாட்டாது. கலந்தாய்விற்கு உரிய நாளில், நேரத்தில் கலந்து கொள்ளவில்லை எனில், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது”எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிரியர்கள், ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுவருகிறது- பேட்ரிக் ரெய்மாண்ட்