தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறியியல் கல்வியில் ஆதிதிராவிடர்களுக்கான கலந்தாய்வு

அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில், ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்ப்பதற்காக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.
நிரப்பப் படாத இடங்களில்ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்ப்பதற்காக

By

Published : Oct 25, 2021, 6:33 AM IST

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில், ஆதிதிராவிடர் மாணவர்களை சேர்ப்பதற்காக இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வின் மூலம் சேர விரும்பும் மாணவர்கள் அக். 24 ஆம் தேதி, மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு குறித்த தகவல்கள அக். 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெளியிடப்படும். இட ஒதுக்கீட்டை அக். 25 ஆம் தேதி, காலை 11 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும். இறுதி இட ஒதுக்கீடு 25 ந் தேதி, மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

மேலும், விபரங்களை அறிவதற்கு www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் அறியலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details