தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை மையம்- தமிழ்நாடு அரசு அரசாணை - தமிழ்நாடு அரசு அரசாணை

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை மையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை மையம்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை மையம்

By

Published : Jan 29, 2022, 4:05 PM IST

சென்னை:அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து ரூ 3.08 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், "2021- 2022 ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின் போது, பள்ளிக் கல்வி அமைச்சர், அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் வழங்க ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து ரூ 3.08 கோடி ஒதுக்கீடு செய்து அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனை மையம் அமைக்க அனுமதி அளிக்கப்படும்.

மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களைக் கொண்டு தொடர் நெறிப்படுத்தும் (Continuous Mentoring) முறைக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இளமை திரும்புதே....முதலமைச்சர் ஸ்டாலின் 'நியூ லுக்' சைக்கிள் பயணம்

ABOUT THE AUTHOR

...view details