தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அஜித், விஜய் பட ஆடை வடிவமைப்பாளர் காலமானார்! - ஆடை வடிவமைப்பாளர் கோவிந்தராஜ் காலமானார்

விஜய், அஜித் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த கோவிந்தராஜ்(82) உடல்நலக்குறைவால் இன்று(மார்ச் 24) காலமானார்.

விஜய், அஜித் பட ஆடை வடிவமைப்பாளர் காலமானா
விஜய், அஜித் பட ஆடை வடிவமைப்பாளர் காலமானா

By

Published : Mar 24, 2022, 1:06 PM IST

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் கோவிந்தராஜ் (82). இவர் கிட்டத்தட்ட 65 படங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று (மார்ச் 24) காலமானார்.

இவர் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக', அஜித் மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த 'நீ வருவாய் என, சூர்ய வம்சம்' உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றியுள்ளார். மேலும் ராமராஜன், கனகா, சங்கீதா போன்றவர்களுக்கு தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

'நீ வருவாய் என, சூர்ய வம்சம்' உள்ளிட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார் கோவிந்தராஜ்

சூப்பர் குட் பிலிம்ஸ், கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன் ஆகியோரது படங்களுக்கு ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளர் இவரே. இவரது உடல் சென்னை போரூரில் உள்ள இவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ரஜினிக்கு நன்றி சொன்ன முதலமைச்சர்!'

ABOUT THE AUTHOR

...view details