தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சொந்த ஊர் செல்ல பதிவு செய்ய வேண்டிய இணையதளங்கள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் செல்லவும், வெளி மாநிலங்களில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சொந்த ஊர் திரும்பவும் பதிவு செய்ய வேண்டிய இணையதள முகவரிகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

corporation
corporation

By

Published : May 4, 2020, 2:55 PM IST

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், இங்கிருக்கும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல், பிற மாநிலங்களில் உள்ள தமிழர்களும், சொந்த ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வெளிமாநிலத்தவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு, பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, தனி நபர் இடைவெளி இல்லாமல், அவர்கள் கூட்டமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், பரபரப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து, சில இணையதள முகவரிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இருக்கும் வெளி மாநிலத்தவர்கள், அவர்களின் சொந்த ஊர் செல்ல, 'http://rtos.nonresidenttamil.org/' என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இங்கு திரும்பி வர, 'http://rttn.nonresidenttamil.org/’ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குக : தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details