சென்னையில் சிறிய அளவில் வீடு கட்டி, அதற்கானக் கடனை செலுத்தி வரும் மக்களுக்கு அதிக சொத்து வரியை விதிக்கும் மாநகராட்சி, நட்சத்திர விடுதிகளுக்கு குறைந்த அளவில் சொத்து வரி விதிப்பதாகக் கூறி, மக்கள் சட்ட உரிமைக் கழகம் என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த மனுவில், "ஒரு நாள் இரவு தங்குவதற்காக 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர விடுதிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 6 லட்சம் ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை மட்டுமே சொத்து வரி விதிக்கப்படுகிறது.
அறைகளின் கட்டண விவரங்களை ஹோட்டல்கள், தங்கள் இணையதளத்தில் தெரிவித்தும், அதைவிட மிகக் குறைவான கட்டணங்களை குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது. இதே போல, திருமண மண்டபங்கள், ஒரு திருமணத்துக்கு 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி வரி விதிக்கப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.