தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் பொறியாளர்கள்தான் பொறுப்பு: சென்னை மாநகராட்சி - Corporation of Chennai The engineers involved should be held accountable If rainwater drainage works are not carried out properly

மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்
மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்

By

Published : Jun 13, 2022, 9:02 PM IST

சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் முதன்மை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், வேலைகளை தொடங்குவதற்கு முன் லெவல் (நிலைகள்) கட்டாயமாக எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் சரிபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் கட்டிய பிறகு, முறையாக வடிகாலில் நீர் செல்லவில்லை என்றால் சம்பந்தப்பட்ட உதவி / முதன்மை பொறியாளர்களே பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டி முடிக்கப்பட்ட வடிகால்களில் தேவையான அளவிலான நீரை லாரிகள் மூலமாக நிரப்பி சரியாக நீர் தேங்காமல் செல்வதை பொறியாளர்கள் சரிபார்க்க வேண்டும். விதிமுறைகளின்படி வடிகால்களின் கான்கிரட் பணிகள் மேற்கொள்ளப்படுவதை தவறாமல் உறுதி செய்திட வேண்டும் என்றும் முறையான தடுப்புகள் போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பணியை நிறைவேற்றும் போது பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வடிகாலின் அனைத்து நுழைவாயில்களுக்கும் சரியான சாய்வு மற்றும் கை தண்டவாள ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பாதுகாப்பு அம்சங்களின் குறைபாடு காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சம்பந்தப்பட்ட JE/AE மற்றும் மேற்பார்வை AEE/EE ஆகியோர் பொறுப்பாவார்கள்.

பணியை நிறைவேற்றுவதற்கு முன், TANGEDCO, CMWSSB, BSNL, OFC நிறுவனங்களுக்கு மண்டல அலுவலர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்/அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் சேவைத் துறைகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தர்மபுரி தேர் விபத்து... இரண்டு பேர் உயிரிழப்பு...!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details