உலகையே அச்சுறுத்தும் கரோனா தமிழ்நாட்டில் சற்று குறைந்துவரும் நிலையில், சென்னையில் மட்டும் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் 94 பேருக்கு சென்னையில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பூ வியாபாரி, சுமைத்தூக்கும் தொழிலாளர், உள்ளிட்ட எட்டு பேருக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.