தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் - மாநகராட்சி பணியாளர்கள் அகற்றம் - பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசு கட்டடங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்தியுள்ளனர்.

பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

By

Published : Aug 9, 2021, 6:04 AM IST

சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளும், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக மாநகரில் நீண்ட நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற மாதந்தோறும் ஒருவார காலத்திற்கு தீவிர தூய்மைப் பணி திட்டம், மாநகரில் அரசு, பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அப்புறப்படுத்துதல், சுவர்களில் வரையப்பட்டுள்ள தனியார் விளம்பரங்களை அப்புறப்படுத்தி அவ்விடங்களில் வண்ண ஓவியங்களை வரைவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த ஒருமாத காலமாக மாநகராட்சிப் பணியாளர்களால் அகற்றப்பட்டு வருகிறது.

சுவரொட்டிகள் அகற்றம்

அதனடிப்படையில் இதுநாள்வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 24 ஆயிரத்து 384 இடங்களில் 1 லட்சத்து 420 சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளது. இதில் வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் 7ஆயிரத்து 498 இடங்களில் 25ஆயிரத்து 403 சுவரொட்டிகளும், மத்திய வட்டாரத்திற்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் 7 ஆயிரத்து 883 இடங்களில் 31ஆயிரத்து 263 சுவரொட்டிகளும், தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் 9ஆயிரத்து 3 இடங்களில் 43ஆயிரத்து 754 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தி.நகர் உள்ளிட்ட இடங்களில் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படலாம் - சென்னை மாநகராட்சி

ABOUT THE AUTHOR

...view details