தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிகாரிகள் மதிப்பதில்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்

மாநகராட்சி அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Jul 30, 2022, 9:05 PM IST

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (ஜூலை 30) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தங்களது வார்டில் நடக்கும் பிரச்சனைகளை மேயர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட கவுன்சிலர் ரேணுகா கூறுகையில், ”ஆய்வுகளின் போது வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து உரிய தகவல்களை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் எங்களுக்கு தருவதில்லை" என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் கூறுகையில், ”தற்போது உள்ள மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களாக உள்ளதால் தற்போதைய ஒத்துழைப்ப வழங்குவதில்லை. அனைவரையும் மொத்தமாக இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதேபோல திமுக மாமன்ற உறுப்பினரும் அவை தலைவருமான ராமலிங்கம், “அதிகாரிகள் ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. அது மட்டும் இல்லாமல் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.

உறுதிகளை அனைத்தும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் பல வார்டுகளில் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. எங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயம். ஒப்பந்தம் பெற்ற கான்ட்ராக்டர்கள் பணிகளை தொடங்கும் போதும் முடிவடையும் போதும் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பணிகளின் நிலை குறித்த ஆய்வின் போதும், அவர்கள் கேட்கும் போதும் தகவல்களை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்டாயம் வழங்கி ஒத்துழைக்க வேண்டும். அனைத்து பணிகளும் தரமாக மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அதிகாரிகள் மீறக்கூடாது, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு? வரும் 1ஆம் தேதி ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details