தமிழ்நாடு

tamil nadu

மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு

By

Published : Apr 24, 2022, 1:16 PM IST

மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

சென்னை:ரிப்பன் மாளிகை அம்மா அரங்கில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான ஒருநாள் நிர்வாகப் பயிற்சி முகாம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கவுன்சிலர்கள் தங்களுக்கு மாலை, சால்வை பாராட்டு மட்டும் வரும் என நினைக்கக் கூடாது.

எந்தச் சூழ்நிலையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். மாநகராட்சி மன்ற கூட்டத்தை அமைதியாக, பிரச்சினை இன்றி நடத்தி செல்வது அவசியம். சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தான் மேயாரக இருந்த போது நாய் தொல்லையை ஒழிக்க கோரி குடிமகன் ஒருவர் அனுகியது குறித்த சுவாரஸ்ய அனுபவத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் பகிர்ந்தது, அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்ய வேண்டாம். கவுன்சிலர்கள் அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும். சென்னையை முன்மாதிரி மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறார்.

கவுன்சிலாராக சிறப்பாக செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல பதவிகள் தேடி வரும்" எனத் தெரிவித்தார். பின்னர் உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாடு சட்டப்பேரவையை முன்உதாரணமாக கொண்டு மாநகராட்சி மாமன்றம் செயல்படவேண்டும்.

எதிர்கட்சி கவுன்சிலர்கள் பேசும்போது கூச்சல் எழுப்பாமல் உரிய பதிலளிக்க வேண்டும்" என்றார். மேலும் சிறப்பாக செயல்படும் மண்டலங்களின் குழுத் தலைவர்களுக்கு, முதலமைச்சர் முன்னிலையில் கெளரவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் நேருவிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:டெல்டா மாவட்டங்களில் தூர்வாருதல் பணிகள் ஜூன் 10ஆம் தேதிக்குள் முடிக்க திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details