தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா விழிப்புணர்வு வாரம்: இலவச சித்த மருந்துகள் விநியோகம் - குடியாத்தம் கோட்டாட்சியர்

கரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, சித்த மருத்துவர்கள் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் இலவச சித்த மருந்துகளை அப்பகுதியினருக்கு விநியோகம் செய்தனர்.

கரோனா விழிப்புணர்வு வாரம்
கரோனா விழிப்புணர்வு வாரம்

By

Published : Aug 4, 2021, 10:01 PM IST

வேலூர்: கரோனா விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, குடியாத்தத்தை அடுத்த பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு சார்பாக, பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே சித்த மருத்துவர்களால் பொதுமக்களுக்கு இன்று (ஆக. 04) கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் குடியாத்தம் கோட்டாட்சியர் தனஞ்செழியன், அரசு சித்த மருத்துவர் தில்லைவாணன், மாவட்ட தலைமை சித்த மருத்துவர் சுசி கண்ணம்மா ஆகியோர் சித்த மருத்துவத்தின் பலன்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

கரோனா பரிசோதனை

அப்போது பேசிய சித்த மருத்துவர் தில்லைவாணன், "கரோனா மூன்றாவது அலை வராமல் தவிர்க்க நாம் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் உணவு வகைகளை அதிகம் உண்ண வேண்டும்" என்றார்.

மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகளை குடியாத்தம் கோட்டாட்சியர் வழங்கினார்.

மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: 'அங்கன்வாடி மையங்கள் திறக்க முடிவு - தமிழ்நாடு அரசு உறுதி'

ABOUT THE AUTHOR

...view details