சென்னை: தமிழ்நாட்டில் மூன்றாவது அலையில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் புதிதாக இன்று(ஜன.25) 30 ஆயிரத்து 55 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 270 என உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி 48 பேர் இறந்துள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 62 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 30 ஆயிரத்து 39 நபர்களுக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 16 நபர்களுக்கும் என 30 ஆயிரத்து 55 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 98 லட்சத்து 82 ஆயிரத்து 950 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 31 லட்சத்து 94 ஆயிரத்து 260 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது.
இவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 270 பேர், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 25 ஆயிரத்து 221 நபர்கள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 45 ஆயிரத்து 678 உயர்ந்துள்ளது.