தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதல்வரின் மகனுக்கு முடிசூட்டு விழா ? - மே 7 ஆம் தேதி முதல்வரின் மகனுக்கு முடிசூட்டு விழா அறிவிப்பு

மூன்றாம் தலைமுறை முடிசூட்டு விழா காணப்போகிறதாம்பா கேள்விப்பட்டீர்களா ? ஆமா, ஆமா, நானும் கேள்விப்பட்டேன் மலைக்கோட்டை மாநகரில் உடன்பிறப்புக்கள் மத்தியில் பரவலாகப் பேச்சு அடிபட ஆரம்பித்து விட்டது.

cm son udhayanidhi stalin get minister nehru portfolio udhayanidhi stalinமுதல்வரின் மகனுக்கு முடிசூட்டு விழா ?
cm son udhayanidhi stalin get minister nehru portfolio udhayanidhi stalin முதல்வரின் மகனுக்கு முடிசூட்டு விழா ?

By

Published : Apr 30, 2022, 12:45 PM IST

திருச்சி :கருணாநிதி அன்பில் தர்மலிங்கம், ஸ்டாலின் அன்பில் பொய்யாமொழி அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்படி கதைக்க ஆரம்பித்து விட்டார்கள், கிட்டத்தட்ட அமைச்சரவை பொறுப்பேற்று ஓராண்டு காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் கிச்சன் கேபினட்டில் இருந்து ஒரே பிரஷராம். மகனை எப்படியாவது மந்திரியாக்க வேண்டும் என்று தளபதியும் தலையசைத்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

சித்தரஞ்சன் சாலை வட்டாரத்தில் முதல்முதலாக அவருக்கு வழங்கப்பட்ட அதே துறையை மீசை அமைச்சரிடம் இருந்து பறித்து இளையவருக்கு அளிக்கத் திட்டமாம். கரூர் காரரிடம் இருக்கும் துறைகளில் ஒன்றை மீசை அமைச்சருக்கு அதாங்க மின்சாரத்துறையை மட்டும் கொடுக்கப்போகிறார்களாம். மின் தடை பிரச்சனையை தடுக்க உங்களவிட்டால் வேறு ஆள் கிடையாது.


உங்ககிட்ட இருக்கிற திறமைக்கு நீங்க எளிதாக சமாளிப்பீங்கனு சாக்குப் போக்கு சொல்கிறார்களாம். மின்வெட்டு பிரச்சனை கடும் பிரச்சனையாக இருக்க அதைத் திசை திருப்பும் விதமாக இப்பொழுதே இளையவருக்குப் பதவி கொடுத்தால் அது பேசு பொருளாகும் என்பதால் கூட இருக்கலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். அனேகமாக மே 7 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாம்.

இதையும் படிங்க: 'உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார்' - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

ABOUT THE AUTHOR

...view details