தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழகம் வந்தன கரோனா தடுப்பூசிகள்!

சென்னை: கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து கோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இன்று சென்னை வந்தடைந்தன.

vaccine
vaccine

By

Published : Jan 12, 2021, 1:19 PM IST

கரோனா தடுப்பூசிகளை போடுவதற்கான நாடு தழுவிய ஒத்திகை இருமுறை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வரும் 16 ஆம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து கோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இன்று காலை சென்னை வந்தடைந்தன. அதன்படி, 5,36,500 கோவி ஷீல்ட், 20,000 கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. தமிழக மருந்துக் கிடங்கு உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்கட்டமாக தடுப்பு மருந்துகள் வைக்கப்படவுள்ளன.

தமிழகம் வந்தன கரோனா தடுப்பூசிகள்!

பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் வினய் மற்றும் அதிகாரிகள், விமான நிலையத்தில் இருந்து தடுப்பு மருந்துகளை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்து 10 கிடங்குகளுக்கு அந்த தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இன்று மாலை பிரித்து வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: மதுவிலக்கு பிரிவில் ரூ. 1.80 லட்சம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details