தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா: மருந்து தயார்... இந்தியாவிலிருந்து கிளம்பும் போதி தர்மர்! - ரத்னா சித்த மருத்துவமனை

சென்னை: உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்திவரும் நிலையில், அதற்கான மருந்தை தயாரித்து சீனா செல்ல தயாராக இருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த தனியார் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.

corona virus medicine found, corona virus medicine found by chennai siddha hospital, கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து, அறிவிப்பை வெளியிட்ட தனியார் சித்த மருத்துவமனை, ரத்னா சித்த மருத்துவமனை, medicine for corona virus
medicine for corona virus

By

Published : Jan 27, 2020, 7:56 PM IST

Updated : Mar 17, 2020, 5:00 PM IST

ஐந்தாம் நூற்றாண்டில் போதி தர்மர் என்ற பௌத்த துறவி சீனா சென்று அங்கு அப்போது பரவிவந்த மிகக்கொடிய நோயை குணப்படுத்தினார். மேலும், அங்குள்ள மக்களுக்கு தற்காப்புக் கலைகளையும் கற்பித்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது இதுவரை ஆராய்ச்சிக்குள்பட்டவையே!

சீனாவில் தற்போது கரோனா என்ற கொடிய வைரஸ் பரவி உயிர்களைக் காவு வாங்கிவருகிறது. அதனால், தற்போது அவர்களை மீட்க ஆபத்பாந்தவனாக போதி தர்மர் வடிவில் யாரேனும் வரமாட்டார்களா என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துவந்தனர்.

இந்த கருத்துகளுக்கு முத்தாய்ப்பாக இந்தியாவின் தனியார் சித்த மருத்துவ நிறுவனம் ஒன்று கரோனாவுக்கு மருந்து உருவாக்கியுள்ளதாகவும் தேவைப்பட்டால் சீனா சென்று சிகிச்சையளிக்க தயார் என்றும் கூறியிருக்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டுவரும் ரத்னா சித்தா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சித்த மருத்துவர் திருத்தணிகாசலமும், விஞ்ஞானி ராமமூர்த்தி ஆகியோர் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது:

உலகெங்கும் பரவிவரக்கூடிய கரோனா வைரஸ் எனப்படும் ஒளிவட்ட வைரசை குணமாக்கக் கூடிய மருந்தை வெளியிடுகிறோம். இதற்கு முன்பாக சிக்கன் குனியா நோய் வந்தபோது நிலவேம்பு குடிநீரை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.

பாம்புகளிடமிருந்து பரவும் கரோனா வைரஸ்?

கரோனா வைரஸ் தாக்குதல்

டெங்கு காய்ச்சல் வந்தபோது வெள்ளருகு மருந்தோடு வேறு சில மருந்துகளையும் சேர்த்து குணமாக்கும் மருந்துகளையும் நாங்கள் வெளியிட்டதோடு 550-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்களை இலவசமாக குணமாக்கினோம்.

இப்போது பரவிவரும் ஒளிவட்ட வைரஸ் எனப்படும் கொரோனா, சார்ஸ் போன்ற நிமோனியா வைரஸாகும். இந்த வைரஸ் ஏழு வகையாக உள்ளது. தற்போது சீனாவில் பரவிவரும் வைரஸ் பீட்டா வகையைச் சார்ந்தது. இந்த வைரஸ் காய்ச்சல் உடல்வலி சோர்வு, அசதி, நுரையீரல் தொற்று, மூச்சு விடுவதில் சிரமம், அதிக காய்ச்சல் என்பதோடு சிறுநீரகத்தையும் செயலிழக்கச் செய்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

நாங்கள் கண்டுபிடித்திருக்கக் கூடிய மருந்து வைரஸ் காய்ச்சலுக்கு எதிராகச் செயல்படுகிறது, காய்ச்சலின்போது ஏற்படக்கூடிய மல்டி ஆர்கன் பெயிலியர் எனப்படும் உள்ளுடல் உறுப்புக்களின் செயல்பாடுகளின் குறைபாட்டைப் போக்குகிறது. குறிப்பாக வைரஸ் பாதிப்பின்போது சிறுநீரகம் செயல்படாமல் இருப்பதுதான் மருத்துவர்களுக்கு பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

கொரோனா வைரஸ்: கோவாவில் தீவிரமடையும் கண்காணிப்பு

எந்த வகையைச் சார்ந்தது கொரோனா

இது புதிய வகை வைரஸ் அல்ல. இதேபோன்று சார்ஸ், பீட்டா, தாமா என ஏழு வகைகள் உள்ளன. விலங்குகளிடமிருந்துதான் இவை பரவுகின்றன. இது நிமோனியா வகையான வைரஸ்தான் என்றாலும், இவை கொரோனோ வெள்ளை அணுக்களைக் குறைத்து, நுரையீரல் தொற்றை ஏற்படுத்தி சோர்வாக்கி, சிறுநீரகத்தைச் செயலிழக்க வைத்துவிடுகிறது.

இதனால் டயாலிசிஸ் செய்ய முடியாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால்தான் சீனா அரசு பயப்படுகிறது. நிலவேம்பு, வெள்ளருகு உள்ளிட்ட பல்வேறு கலப்புகள் நிறைந்ததாக உள்ளது. இந்த மருந்தை உட்கொண்டால் 12 மணி நேரத்தில் டபிள்யூ.பி.சி.யை அதிகப்படுத்தி, சிறுநீரக செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ்: சீனாவில் இருக்கும் இந்தியர்களை கண்டறிவதில் சிக்கல்!

மூலிகை மூலம் நிவாரணம்

எங்களால் கொடுக்கக் கூடிய மருந்து உள் உறுப்புகளின் செயல்பாடுகளின் குறைபாட்டைத் தடுக்கிறது என தனியார் மருத்துவமனைகள் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். எங்கள் மருந்துகள் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் ஆயுஷ் அமைப்பிற்கு 2017ஆம் ஆண்டு அனுப்பியுள்ளோம். அது பரிசீலனையில் இருக்கும் என நம்புகிறோம்.

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யக்கூடிய வசதிகள் இங்கு இல்லை. இதன் ஆபத்து நுண் கருவிகளின் உதவியால் பார்த்தால் தான் கொரோனா வைரஸ் ஒரு ஒளிவட்டம் போல் தென்படும். உலக சுகாதார நிறுவனம் மட்டுமே, இதனை அங்கீகரிக்க முடியும். எனவே தான் மத்திய, மாநில அரசுகள் தவிர உலக சுகாதார நிறுவனத்திற்கு கொடுக்க தயாராக உள்ளோம்.

கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து: அறிவிப்பை வெளியிட்ட தனியார் சித்த மருத்துவமனை

எங்கு வேண்டுமானாலும் உதவ தயார்

அதன்மூலம் சீனாவிற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து மருத்துவம் செய்ய தயாராக இருக்கிறோம். எந்த நாட்டில் டெங்கு நோய் வந்தாலும், டெங்குவிற்கு மருந்து இல்லை என உலக சுகாதார நிறுவனம் சொல்லியுள்ளது. ஆனால், நிலவேம்பு உள்ளிட்ட மூலிகை மருந்தை உட்கொண்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைத்திருப்பதைப் பார்க்க முடியும்.

50 ஆயிரம் வரை தட்டை அணுக்கள் குறைந்த நபரைகூட ஒன்றரை லட்சம் வரை அதிகரிக்கச்செய்ய முடியும் என்பதை அம்மருந்து உணர்த்திகாட்டியிருக்கிறது. 550 பேருக்கு சிகிச்சை கொடுத்து பின்னர் இதனை உறுதி செய்துள்ளோம்"

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எப்படியோ அந்த மருந்தை விரைந்து சீனாவுக்கு கொண்டுபோய் சிகிச்சையளித்து உயிரிழப்புகள் மேலும் ஏற்படாமல் தடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியே! இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் சீனர்கள் போதிதர்மர் வடிவில் இந்தியர்களை காண்பர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Last Updated : Mar 17, 2020, 5:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details