தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா! - சென்னை கரோனா தொற்று அதிகரிப்பு

சென்னை: கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் 15 ஆயிரத்தை நெருங்குகிறது.

Chennai corona infection
Chennai corona infection

By

Published : Jun 1, 2020, 2:40 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று (மே 31) ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்குகிறது. கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மட்டும் 804 பேர்.

தற்போதுவரை அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 1798 பேர், தேனாம்பேட்டையில் 1662 பேர், தண்டையார்பேட்டையில் 1661 பேர், அண்ணா நகரில் 1237 பேர், வளசரவாக்கதில் 871 பேர் என 15 மண்டலங்களில் 14 ஆயிரத்து 802 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 14 ஆயிரத்து 802 நபர்களில் 60.51 விழுக்காடு ஆண்கள், 39.47 விழுக்காடு பெண்கள் உள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ராயபுரம் போன்ற இடங்களில் மக்கள் அடர்த்தியாக இருப்பதாலேயே கரோனா அதிக அளவில் பரவுகிறது என அலுவலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுப் பரவவலைத் தடுப்பதற்கு வீடு வீடாகச் சென்று முகக்கவசம், கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details