கரோனா தடுப்பூசி வரும் 16 ஆம் தேதி முதல் போடப்படவுள்ள நிலையில், புனேவிலிருந்து தமிழகத்திற்கு இன்று தடுப்பு மருந்துகள் வந்து சேர்ந்தன. அவை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தில் இருந்து, 10 மண்டல சேமிப்பு கிடங்குகளுக்கு, அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து 45 சுகாதார மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டன.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் குளிர்பதன தொடர் நிலையத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னுரிமை அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்களுக்கும் அடுத்ததாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
மண்டலங்கள் | தடுப்பூசி மருந்துகள் | |
1 | சென்னை | 1,18,000 |
2 | கடலூர் | 25.500 |
3 | திருச்சி | 42,200 |
4 | தஞ்சாவூர் | 28,600 |
5 | மதுரை | 54,100 |
6 | சிவகங்கை | 19,000 |
7 | திருநெல்வேலி | 51,700 |
8 | வேலூர் | 42,100 |
9 | சேலம் | 59,800 |
10 | கோயம்புத்தூர் | 73,200 |
சென்னை மண்டலத்திற்கு 1 லட்சத்து 18 ஆயிரம் தடுப்பூசி மருந்துகளும், கடலூர் மண்டலத்திற்கு 25,500 மருந்துகளும், திருச்சிக்கு 40,200 மருந்துகளும், தஞ்சைக்கு 28,600 மருந்துகளும், மதுரைக்கு 54,100 மருந்துகளும், சிவகங்கை மண்டலத்திற்கு 19,000 மருந்துகளும், நெல்லைக்கு 51,700 மருந்துகளும், வேலூருக்கு 42,100 மருந்துகளும், சேலத்திற்கு 59,800 மருந்துகளும், கோவைக்கு 73,200 மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.