தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 9, 2021, 9:29 PM IST

ETV Bharat / city

விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்த கரோனா தடுப்பூசிகள்!

மும்பை, ஹைதராபாத்திலிருந்து விமானங்களின் மூலம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 கரோனா தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்க்கு வந்தது.

கரோனா தடுப்பூசிகள்
Corona vaccines

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் கரோனா தொற்று இரண்டாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தாா்.

அதனை ஏற்ற மத்திய அரசு, மும்பை, ஹைதராபாத்திலிருந்து இரண்டு விமானங்களில் கூடுதலாக தடுப்பூசி மருந்துகளை இன்று(மே.9) சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளது.

அதன்படி, மும்பையிலிருந்து இன்று(மே.9) மாலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 5 லட்சத்து 89 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 50 பாா்சல்களில் வந்தன. அதைப்போல் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 530 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகள் 37 பாா்சல்களில் வந்தன.

ஒரே நாளில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 டோஸ் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்துகளை குளிா்சாதன வாகனங்கள் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு சுகாரதாரத் துறையினர் எடுத்து சென்றனர்.

இதையும் படிங்க: ஆழ்கடலில் 50 அடி ஆழத்தில் உடற்பயிற்சி - விழிப்புணர்வு வீடியோ

ABOUT THE AUTHOR

...view details