தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு முழுவதும் 8ஆவது தடுப்பூசி முகாம்: 16.32 லட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி! - எட்டாவது தடுப்பூசி முகாம்

நவம்பர் 14(இன்று) 16.32 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இலட்சம் பயனாளிகளுக்கு இன்று தடுப்பூசி
இலட்சம் பயனாளிகளுக்கு இன்று தடுப்பூசி

By

Published : Nov 14, 2021, 10:29 PM IST

சென்னை:தமிழ்நாடு முழுவதும் இன்று(நவ.14) மாபெரும் எட்டாவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் 16.32 லட்சம் பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் கரோனா தடுப்பூசிப் பணிகள் நடைபெற்றன.

மேலும், இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்கத் திட்டமிடப்பட்டது.

மேலும் இதுவரை நடைபெற்ற ஏழு தடுப்பூசி முகாம்களின் முழுவிவரம் பின்வருமாறு:

ஏழு மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம்:

முதலாவது 12-09-2021அன்று 28.91 லட்சம் பேருக்கும்,
இரண்டாவது 19-09-2021அன்று 16.43 லட்சம் பேருக்கும்,
மூன்றாவது 26-09-2021அன்று 25.04 லட்சம் பேருக்கும்,
நான்காவது 03-10-2021அன்று 17.04 லட்சம் பேருக்கும்,
ஐந்தாவது 10-10-2021அன்று 22.85 லட்சம் பேருக்கும்,
ஆறாவது 23-10-2021அன்று 23.27 லட்சம் பேருக்கும்,
ஏழாவது 30-10-2021அன்று 17.20 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட்டது.

சுமார் 12 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், இன்று நடைபெற்ற எட்டாவது தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 16,32,498 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் தவணையாக 5,44,809 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 10,87,689 பயனாளிகளுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை, திருவள்ளூர் (பூவிருந்தமல்லி உட்பட) மாவட்டங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை நேரடி கள ஆய்வு செய்தார்.

மேலும், மாநிலத்தில் இன்று நடைபெற்ற எட்டாவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (15.11.2021) கரோனா தடுப்பூசிப் பணிகள் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோவையைத் தொடர்ந்து கரூரிலும் பள்ளி மாணவிக்குப்பாலியல் தொல்லை; மருத்துவர் மீது பாய்ந்த போக்சோ

ABOUT THE AUTHOR

...view details