கரோனா பாதிப்பால் 76 பேர் உயிரிழப்பு - health department
corona
By
Published : Sep 22, 2020, 6:18 PM IST
|
Updated : Sep 22, 2020, 7:41 PM IST
18:05 September 22
கரோனா பாதிப்பால் 76 பேர் உயிரிழப்பு
சென்னை: மாநிலத்தில் 5ஆயிரத்து 337 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பாளர்களின் 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மேலும் 5ஆயிரத்து 337 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 உயர்ந்துள்ளது. இன்று கரோனாவால் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5ஆயிரத்து 406 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் நான்கு லட்சத்து 97 ஆயிரத்து 377 ஆக பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், சென்னையில் 20ஆவது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 57ஆயிரத்து 614ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று 82 ஆயிரத்து 928 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் 64 லட்சத்து 36 ஆயிரத்து 700 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 46 ஆயிரத்து 350 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மற்றும் சென்னையில் தலா ஒரு தனியார் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 176 பரிசோதனை மையங்கள் உள்ளன.