சென்னை:பொதுசுகாதாரத் துறை இயக்குநரகம் மே 9ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 13 ஆயிரத்து 678 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 37 நபர்களுக்கும், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 38 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்கள்:தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 51 லட்சத்து 36 ஆயிரத்து 276 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், 34 லட்சத்து 54 ஆயிரத்து 391 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
தமிழ்நாட்டில் மேலும் 38 பேருக்கு கரோனா பாதிப்பு - பொது சுகாதாரத் துறை இயக்குனரகம்
தமிழ்நாட்டில் மேலும் 38 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 454 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 62 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 912 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாகப் பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 20 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 7 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் மூன்று நபர்களுக்கும் கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு சர்வதேச விமானத்தின் மூலம் வந்த ஒருவருக்கும் என 38 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பினால் சென்னையில் 640 நபர்களும் செங்கல்பட்டில் 175 நபர்களும் கோயம்புத்தூரில் 16 நபர்களும் காஞ்சிபுரத்தில் 14 நபர்களும் திருவள்ளூரில் 11 நபர்களும் என அதிகபட்சமாக சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றார்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி