தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரண்டாவது தவணை ரூ.2000 நாளை முதல் வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி

கரோனா நிவாரண இரண்டாவது தவணை ரூ 2000, 14 மளிகைப் பொருட்கள் நாளை முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரூ 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள்
ரூ 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள்

By

Published : Jun 14, 2021, 2:41 PM IST

Updated : Jun 14, 2021, 2:50 PM IST

சென்னை : கரோனா தொற்று நிவாரணமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 4000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து முதல் தவணையாக கடந்த மே மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போது இரண்டாவது தவணை நிவாரணம் ரூ.2000 நாளை(ஜூன்15) முதல் வழங்கப்பட உள்ளதாகவும், அதோடு 14 வகை மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என்றும் கூறினார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் சக்கரபாணி

மேலும், பொது மக்கள் அவசரமின்றி, முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

நாளை முதல் இந்த மாத இறுதி வரை பொருள்கள் வழங்கப்பபடும் என்று தெரிவித்த அமைச்சர்,
14 வகை மளிகைப் பொருட்களை சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Last Updated : Jun 14, 2021, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details