திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர், சிஐடி காலனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கனிமொழிக்கு கரோனா உறுதி - நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
11:49 April 03
சென்னை:திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று மதியம் அவர் நுங்கம்பாக்கத்தில், உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கனிமொழி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அத்துடன் இன்று கரூர் மாவட்டத்தில் பரப்பரை செய்ய திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழலில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம்