ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர்
சென்னை: ஒரே நாளில் 12 ஆயிரத்து 259 நபர்களுக்கு கரோனா பரிசோதளை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது.
கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. சென்னையில் 5 ஆயிரம் பரிசோதனை செய்யும்போது, எவ்வளவு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதோ, அதே அளவு தொற்று தான் 12 ஆயிரம் பரிசோதனை செய்யும் போதும் வருகிறது.
நேற்று (ஜூலை.17) எப்போதும் இல்லாத அளவில் 12 ஆயிரத்து 259 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1, 243 நபர்களுக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது வரைலும் 83 ஆயிரத்து 377 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, அதில் 80 விழுக்காடு ( 67 ஆயிரத்து 77 நபர்கள் ) மக்கள் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மீதமுள்ள 14 ஆயிரத்து 923 நபர்கள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைத்தவர்களின் மண்டல வாரியாக பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
ராயபுரம் - 8 ஆயிரத்து 766 பேர்
திரு.வி.க. நகர் - 5 ஆயிரத்து 485 பேர்
வளசரவாக்கம் - 3 ஆயிரத்து 341 பேர்
தண்டையார்பேட்டை - 7 ஆயிரத்து 625 பேர்
தேனாம்பேட்டை - 7 ஆயிரத்து 582 பேர்
அம்பத்தூர் - 3 ஆயிரத்து 177 பேர்
கோடம்பாக்கம் - 7 ஆயிரத்து 172 பேர்
திருவொற்றியூர் - 2 ஆயிரத்து 540 பேர்
அடையாறு - 4 ஆயிரத்து 318 பேர்
அண்ணா நகர் - 7 ஆயிரத்து 693 பேர்
மாதவரம் - 2 ஆயிரத்து 184 பேர்
மணலி - 1, 277 பேர்
சோழிங்கநல்லூர் - 1, 471 பேர்
பெருங்குடி - 1, 788 பேர்
ஆலந்தூர் - 1, 882 பேர்.
மேலும் 1, 376 நபர்கள் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர்.