தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொடங்கியது வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா பரிசோதனை - சென்னை கரோனா பரிசோதனை

சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி இன்று (ஏப். 28) தொடங்கியது.

சென்னை வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா பரிசோதனை
சென்னை வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா பரிசோதனை

By

Published : Apr 28, 2021, 7:27 PM IST

சென்னையைப் பொறுத்தவரை மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் மே 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

ஒரு தொகுதிக்கான மொத்த முகவர்கள்

  • வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் இருப்பர்.
  • மேலும், 14 மேசைகளுக்கு 14 முகவர்கள், ஒரு தலைமை முகவர்,
  • அஞ்சல் வாக்குகளுக்கு ஒரு முகவர், வெளியில் நான்கு மாற்று முகவர்கள் என ஒரு தொகுதிக்கு மொத்தமாக 20 முகவர்கள் உள்ளனர்.

கரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கியுள்ளது, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மே 2 வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச்சாவடி முகவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் தவணை சான்றிதழை வைத்திருக்க வேண்டும். கரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றிதழ் காட்டிய பிறகே உள்ளே அனுமதிப்பார்கள்.

ABOUT THE AUTHOR

...view details