தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குறைக்கப்பட்ட கரோனா பரிசோதனைக் கட்டணம்: எவ்வளவு தெரியுமா!

Corona test cost cut in tamilnadu
Corona test cost cut in tamilnadu

By

Published : May 20, 2021, 10:59 AM IST

Updated : May 20, 2021, 12:15 PM IST

10:53 May 20

சென்னை: தமிழ்நாட்டின் கரோனா தொற்றுக்கான பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

  1. கரோனா தொற்றை உறுதிப்படுத்தும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் ரூ.800/- லிருந்து ரூ.550/-ஆகவும், குழு மாதிரிகளுக்கு (Pooled Samples) ரூ.600/-லிருந்து ரூ.400/- ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக் கூடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200/- லிருந்து ரூ.900/- ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்வதற்கு கூடுதலாக ரூ.300/-ம் கட்டணம் (மாற்றமின்றி) நிர்ணயம் செய்யப்படுகிறது.
  3. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கான தொகையினை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் (UIIC) மறுபரிசீலனை செய்த பிறகு மீள வழங்கப்படும்.
Last Updated : May 20, 2021, 12:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details