சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக நோய் தொற்று 500 க்கும் கீழ் இருந்து வருகிறது. நேற்று 10 ஆயிரத்து 09 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 489 நபர்களுக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது. அதன்படி பார்த்தால் சென்னையில் கரோனா பாதிப்பு விழுக்காடு 5 க்கும் கீழாகியுள்ளது
இதுவரை மொத்தமாக, 2 லட்சத்து 11 ஆயிரத்து 084 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அதில் 96 விழுக்காடு (2 லட்சத்து 02 ஆயிரத்து 660 நபர்கள்) மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 4 ஆயிரத்து 622 நபர்கள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருருந்து குணமடைந்தோரின் மண்டல வாரி பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
- அண்ணாநகர் - 22 ஆயிரத்து 484 பேர்
- கோடம்பாக்கம் - 22 ஆயிரத்து 050 பேர்
- தேனாம்பேட்டை - 19 ஆயிரத்து 472 பேர்
- ராயபுரம் - 18 ஆயிரத்து 167 பேர்
- திரு.வி.க. நகர் - 16 ஆயிரத்து 054 பேர்
- வளசரவாக்கம் - 12 ஆயிரத்து 940 பேர்
- தண்டையார்பேட்டை - 15 ஆயிரத்து 912 பேர்
- அம்பத்தூர் - 14 ஆயிரத்து 405 பேர்
- திருவொற்றியூர் - 6 ஆயிரத்து 184 பேர்
- அடையாறு - 16 ஆயிரத்து 108 பேர்
- மாதவரம் - 7 ஆயிரத்து 372 பேர்
- மணலி - 3 ஆயிரத்து 254 பேர்
- சோழிங்கநல்லூர் - 5 ஆயிரத்து 527 பேர்
- பெருங்குடி - 7ஆயிரத்து 462 பேர்
- ஆலந்தூர் -8 ஆயிரத்து 260 பேர்
மேலும், சென்னையில் இதுவரை 3, 802 பேர் இந்த தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆதி திராவிடர், பழங்குடியினரின் ஈமச்சடங்கு மானியம் ரூ. 5 ஆயிரமாக உயர்வு