கரோனா தொற்று காலமான தற்போது மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகியவற்றிற்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத சூழலில் தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500லிருந்து 1,000ஆக குறைப்பு, வாக்குச்சாவடி நுழைவு வாயில்களில் உடல் வெப்பப்பரிசோதனை, வாக்காளர்களுக்கு சானிடைசர், வாக்குப்பதிவிற்காக வாக்காளரின் இடது கைக்கான கையுறை உள்ளிட்டவைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இத்தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 88,937 வாக்குச்சாவடிகளிலும், குடிநீர் வசதி, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பந்தல், கழிப்பறை வசதிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்யவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.54 கோடிக்கு கொள்முதல்! இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் சார்பில், வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தெர்மாமீட்டர், சானிடைசர், ஃபேஸ் ஷீல்டு, கையுறை, முழு உடல் கவச உடைகள், முகக்கவசம் ஆகிய உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரகாஷ் நம்மிடம் கூறும்போது, ”கரோனா காலத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், யாருக்கும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் மிகவும் தெளிவாக இருக்கிறது. எனவே, வாக்காளர்கள் அனைவரும் 200 மீட்டர் தூரத்திற்கு முன்னரே நிறுத்தப்பட்டு, அதன் பின்னர் 6 மீட்டர் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கப்படவுள்ளது.
கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.54 கோடிக்கு கொள்முதல்! அதனையடுத்து, வாக்காளருக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டு சானிடைசர் அளிக்கப்படும். வாக்காளரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டப் பின், இடது கையில் அணிவதற்கான கையுறை அளிக்கப்பட்டு, வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படும். முகக்கவசம் அணியாத யாருக்கும் வாக்குச்சாவடிக்குள் அனுமதி கிடையாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய மருத்துவக்கல்லூரிகள் விதிக்குள்பட்டு கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு