தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு விதி அதிமுகவினருக்கு பொருந்தாதா? - அரசு விதி அதிமுகவினருக்கு பொருந்தாதா?

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் காற்றில் பறந்த கரோனா நெறிமுறைகள். முகக்கவசம், தனிமனித இடைவெளி இன்றி அதிமுகவினர் இருந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

meeting
meeting

By

Published : Dec 8, 2020, 6:59 PM IST

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் குறைய அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, முதலமைச்சரும், அமைச்சர்களும் அடிக்கடி கூறி வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கட்சிப்பணிகள் குறித்து வடசென்னை அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். சுமார் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்திருந்ததால் தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டது.

அரசு விதி அதிமுகவினருக்கு பொருந்தாதா?

குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமாருடன் மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் யாரும் முகக்கவசம் அணியாமல் இருந்தனர். ஆளுங்கட்சியான அதிமுகவே பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் தொற்று பரவும் வகையில் நடந்து கொள்வதை எப்படி ஏற்றுக்கொள்வது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: சரத்குமாருக்கு கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details