தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா! - Corona in Tamil Nadu

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் இருமடங்கு அதிகரித்துள்ளது.

Corona rise again in Tamil Nadu
Corona rise again in Tamil Nadu

By

Published : Mar 15, 2021, 8:26 PM IST

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று(மார்ச்.15) 835 பேருக்கும், அர்மீனியா நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 836 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 553 பேர் குணமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் இருவரும், அரசு மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர்.

அதனடிப்படையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்து 60 ஆயிரத்து 562ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 862ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 551ஆகவும் அதிகரித்துள்ளன. இதுவரை 1 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 760 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தாக்கம் அதிகரித்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் மார்ச் 4ஆம் தேதி பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை 482ஆக இருந்தது. ஆனால், கடந்த 10 நாட்களில் இரண்டு மடங்கு அதிகரித்து 836ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை மாட்டம் 2,39,131
  • கோயம்புத்தூர் மாவட்டம் 56,543
  • செங்கல்பட்டு மாவட்டம் 53,673
  • திருவள்ளூர் மாவட்டம் 44,687
  • சேலம் மாவட்டம் 32,908
  • காஞ்சிபுரம் மாவட்டம் 29,755
  • கடலூர் மாவட்டம் 25,286
  • மதுரை மாவட்டம் 21,376
  • வேலூர் மாவட்டம் 21150
  • திருவண்ணாமலை மாவட்டம் 19,551
  • திருப்பூர் மாவட்டம் 18,683
  • தஞ்சாவூர் மாவட்டம் 18,445
  • தேனி மாவட்டம் 17,202
  • கன்னியாகுமரி மாவட்டம் 17,221
  • விருதுநகர் மாவட்டம் 16,730
  • தூத்துக்குடி மாவட்டம் 16,395
  • ராணிப்பேட்டை மாவட்டம் 16,276
  • திருநெல்வேலி மாவட்டம் 15,822
  • விழுப்புரம் மாவட்டம் 15,310
  • திருச்சி மாவட்டம் 15,148
  • ஈரோடு மாவட்டம் 14,994
  • புதுக்கோட்டை மாவட்டம் 11,715
  • நாமக்கல் மாவட்டம் 11,883
  • திண்டுக்கல் மாவட்டம் 11,602
  • திருவாரூர் மாவட்டம் 11,487
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் 10,916
  • தென்காசி மாவட்டம் 8,585
  • நாகப்பட்டினம் மாவட்டம் 8,709
  • நீலகிரி மாவட்டம் 8,451
  • கிருஷ்ணகிரி மாவட்டம் 8,226
  • திருப்பத்தூர் மாவட்டம் 7,666
  • சிவகங்கை மாவட்டம் 6,841
  • ராமநாதபுரம் மாவட்டம் 6,496
  • தர்மபுரி மாவட்டம் 6,675
  • கரூர் மாவட்டம் 5,538
  • அரியலூர் மாவட்டம் 4,756
  • பெரம்பலூர் மாவட்டம் 2,296
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 962
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,044
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க:தஞ்சாவூரில் ஒரே பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details