தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியது! - corona positive crossed 300 above in chennai

சென்னை: மாநகராட்சியை உள்ளடக்கிய பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது.

corona
corona

By

Published : Apr 21, 2020, 5:00 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் நாளுக்கு நாள் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

தமிழ்நாட்டிலும் கரோனா தீவிரமடைந்துள்ளது. நேற்று மட்டும் 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 303 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்படோரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பட்டியல் பின்வருமாறு:

  • தண்டையார்பேட்டை - 37 பேர்
  • ராயபுரம் - 92 பேர்
  • திரு.வி.க. நகர் - 39 பேர்
  • தேனாம்பேட்டை - 38 பேர்
  • திருவொற்றியூர் - 9 பேர்
  • அடையார் - 7 பேர்
  • பெருங்குடி - 7 பேர்
  • ஆலந்தூர் - 5 பேர்
  • வளசரவாக்கம் - 5 பேர்
  • சோழிங்கநல்லூர் - 2 பேர்
  • அண்ணாநகர் - 27 பேர்
  • கோடம்பாக்கம் - 31 பேர்

இதையும் படிங்க:உ.பி.யில் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details