தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் அலட்சியம்! - கரோனா நோய்த் தொற்று பரவல்

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சுகாதாரத் துறை அலுவலர்கள் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

corona patient
corona patient

By

Published : Apr 10, 2021, 10:36 AM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பின் 2ஆம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் நாள்தோறும் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூரிலும் தினமும் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சுகாதாரத் துறையினர் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் வேனில் அழைத்து செல்லாமல், இரு சக்கர வாகனத்தில் வருமாறு திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் வேனில் கூட்டமாக அழைத்து செல்கின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் அலட்சியம்!

இதனால், அவர்கள் மூலமாக பலருக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:கரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் நடைமுறை

ABOUT THE AUTHOR

...view details