தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 481 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 481 பேருக்கு கரோனா தொற்று! - தமிழ்நாடு கரோனா அப்டேட்
18:43 November 02
சென்னையில் ஒரே நாளில் 671 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இன்று ஒரே நாளில் 31 பேர் கரோனாவிற்கு தரப்பட்ட சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 183ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3,940 பேர் கரோனாவில் இருந்து பரிபூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் 121 நாட்களுக்குப் பின், தற்போது 10ஆவது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ்(2,481) கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 7.29 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 7,27,026லிருந்து 7,29,507ஆக உயர்ந்துள்ளது.